
துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இன்று 79-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டுவிட்டரில் ஹமீது அன்சாரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து செய்தி…
“இந்தியாவில் பல்வேறு உயர்பதவிகளை வகித்துள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பல்லாண்டு காலம் பொதுவாழ்க்கையின் மூலம் ஆற்றியுள்ள சேவை மிகவும் மகத்தானது ஆகும். பிறந்தநாளை கொண்டாடும் நமது ஹமீது அன்சாரி ஜி நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்”.
Patrikai.com official YouTube Channel