பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு ஆபத்தானக் காரணி–போதிய தூக்கமின்மை
ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக இரவில் தூங்குபவர்கள் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என ஒரு கொரியன் ஆய்வு தெரிவிக்கிறது.
உயர் இரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு, நடுப்பகுதியை சுற்றி கூடுதல் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் அதிக அளவுகளில் கொழுப்பு என இந்த ஆபத்து காரணிகள் அனைத்தும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்று அறியப்படுகிறது.
“குறைவாகத் தூங்குபவர்கள் வளர்சிதை மாற்ற நோய்க்குறி வளரும் அபாயங்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்,” என்று தென் கொரியா யோசெய் பல்கலைக்கழக தலைமை ஆசிரியர் டாக்டர் ஜாங் யங் கிம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 2,600 பெரியவர்களைத் தொடர்ந்து கிம் அணி கண்கானித்து, ஒரிரவில் குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்காமல் இருப்பவர்களுக்கு, ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குபவரகளை விட வளர்சிதை மாற்ற நோய்க்குறி உருவாக 41 சதவீதம் அதிகமாக வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டது.
தூங்கும் பழக்கத்தைப் பற்றி கேள்விகள் சேர்த்து இரண்டு விதமான வாழ்க்கைமுறையிலிருந்தும் ஆய்வுகள் நடத்தி கண்டுபிடிப்புகள் பெறப்பட்டுள்ளது. 2005க்கும் 2008க்கும் இடையில் ஒரு முறையும் மீண்டும் 2008 க்கும் 2011க்கும் இடையில் ஒரு முறையும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வு பங்கேற்பாளர்களும் மருத்துவ தேர்வுகளை மேற்கொண்டு அவர்களின் மருத்துவ வரலாறை பகிர்ந்து கொண்டனர்.
சராசரியாக 2.6 ஆண்டுகளாக பின்தொடர்ந்த பிறகு, சுமார் 560 பேர், அல்லது 22 சதவீதம் பங்கேற்பாளர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி உருவானதாக ஸ்லீப் என்ற பத்திரிகை முடிவுகள் காட்டுகிறது.
அதிக நேரம் தூங்குபவர்களோடு ஒப்பிடுகையில், குறுகிய நேரம் உறங்குபவர்களுக்கு உயர் இரத்த சர்க்கரை மற்றும் அதிகப்படியான தொப்பை கொழுப்பு வருவதற்கு சுமார் 30 சதவீதம் அதிகரித்த ஆபத்து, அத்துடன் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கு 56 சதவிகிதம் வாய்ப்புள்ளது.
இந்த ஆய்வின் ஒரு குறைபாடு என்னவென்றால் பங்கேற்பாளர்கள் தங்களது தூக்கப் பழக்கம், மருத்துவ நிலைமைகள் மற்றும் வாழ்க்கைமுறை நடத்தைகள் பற்றி துல்லியமாக நினைவு கூர்ந்து தெரிவிப்பது. தூக்கத்தின் தரம் பற்றிய தகவலும் இதில் கிடைக்கப்பற்வில்லை.
இந்த கண்டுபிடிப்புகள்; உறக்க நேரம், இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி இவைகளுக்கிடையில் ஒரு தொடர்பு உள்ளது என்று மற்ற ஆய்வுகளின் கண்டுப்பிடிப்பிற்கும்இசைவானதாக இருக்கிறது என இந்த ஆய்வில் தொடர்பில்லாத சிகாகோ பல்கலைக்கழகத்தின் தூக்கம் குறித்த ஆராய்ச்சியாளர் கிறிஸ்டன் நட்சன், தெரிவித்துள்ளார்.
“இந்த ஆய்வின் பலம் என்னவென்றால் இது ஒரு வருங்கால ஆய்வு,இதில் குறுகிய தூக்கம், வளர்சிதை மாற்ற நோய்க்குறி வளர்ச்சிக்கு தொடர்புடையதாக உள்ளது,” என்று நட்சன் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். “மக்களுக்கு இந்த நோய் வருமுன் தூக்க நேரம் அளவிடப்படுகிறது என்பதால் இது முக்கியமானது .”
போதிய தூக்கமின்மையின் தவறான விளைவுகளை தவிர்க்க, நோயாளிகள் தங்களது அன்றாட நடைமுறைகளை நன்கறிந்து ஓய்வெடுக்க போதுமான நேரம் அனுமதிக்க உறுதி செய்ய வேண்டும், என நட்சன் கூறினார்.
வேலை, பள்ளி அல்லது குழந்தைபராமரிப்பு போன்ற சில விஷயங்களைத் தவிர்க்க இயலாது, ஆனால் தொலைக்காட்சி அல்லது திரைப்படத்திற்கான நேரம் போன்ற மற்ற விஷயங்களை ஓய்வெடுக்க பயன்படுத்தலாம்.
“போதிய தூக்கத்தோடு சேர்ந்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சியைப் பின்பற்றினால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்” என்றார்.