mukesh ambani
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு  நிருவனமான ரிலையன்ஸ் ஜியொ,  விரைவில் அதன் 4G சேவையை அமைதியாகத் துவங்கவுள்ளது என கிரெடிட் சூசி ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
Reliance-Jio-Infocomm-Ltd-4G
ரிலையன்ஸ் ஜியொ ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கும் இந்த 4G சேவைகளை வழங்கி வருகிறது.
“மும்பையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்றுப் பார்த்தபொழுது அவர்கள் விரைவில் ஜியொ- 4 ஜி இணைப்புகளின் மென்மையான வெளியீட்டுக்கு தயார் ஆகி சாத்தியமென தெரியவந்தது,” என கிரெடிட் சூசி தெரிவித்துள்ளது.
mukesh 2
வாடிக்கையாளர்கள் சேர்ப்பதற்கும், ஆவணங்கள் மேலாண்மை மற்றும் தயாரிப்பு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு விளக்குவதற்கும் சிறப்பு பயிற்சி அமர்வுகள் மூலம் கடை ஊழியர்களுக்கும்  பயிற்சி கொடுக்கப்பட்டது.
விரைவான வாடிக்கையாளர் சேர்க்கை வசதிக்காக கடைகளின் உள்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, கடை ஊழியர்கள் “ஜியொ-4G சிம்கள் கடைகளுக்கு வந்தது சேர்ந்துள்ளது, ஆனால் எப்போது  விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட வில்லை,” என்றார்.
மென்மையான வெளியீட்டில், வாடிக்கையாளர்கள் ₹. 200-க்கு சிம்கார்ட் வாங்கினால் இலவச Data மற்றும் அழைப்புகள் மூன்று மாதங்களுக்கு இலவசம்(கடந்த டிசம்பரில் வெளியீடப்பட்ட, ஊழியர்களுக்கு வழங்கிய இலவச பயன்பாடு 75 GB Data மற்றும் 4500 நிமிடங்கள் அழைப்புகள் உச்சவரம்பாக இருந்தது) . ஆனால் மூன்று மாதத்திற்கு பிறகு என்ன கட்டணம் என்பது குறித்து அறிவுப்பு இல்லை.மேலும், வாடிக்கையாளர்கள் கட்டாயமாக ஒரு lyf கைபேசி வாங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்தும் தகவல் இல்லை.”
mukesh 3
வரவிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் RJio அறிமுகப்படுத்தப்பட வுள்ள நிலையில் “ டெல்கோ பங்குகள் மீது நம் எச்சரிக்கையாக பார்வை தொடரும்” என  பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற இந்திய தொலைத் தொடர்பு மற்றும் போட்டியாளர்கள் மீது ரிலையன்ஸ் தாக்கம் மிகவும் ஆவேசமான இருக்கும்” என கிரெடிட் சூசி தெரிவித்துள்ளது.
reliance jio 2 reliance jiio 2
அனில் அம்பானியுடன் சண்டையிட்டு பிரிந்த்தில், அனில் அம்பானி வசம் ரிலையன்ஸ் கம்யுனிகேசன்ஸ் சென்றதால், முகேஷ் அம்பானி இரண்டாம் முறையாக, ₹ 100000 கோடி முதலீட்டில், டெலிகாம் கம்பெனி “ரிலையன்ஸ் ஜியோ” வைத் துவங்கி , “இந்த ஆண்டு இறுதிக்குள் 80% இந்தியாவையும், 2017ஆம் ஆண்டுக்குள் 90% இந்தியாவையும் மற்றும் 2018ல் முழு இந்தியாவையும் 4G  வசதியுள்ள இந்தியாவாக மாற்றிவிடுவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
reliance jio 3