denmark dansih 3
குடியேற்றத்திற்கு எதிரான கட்சி ஒன்று முன்வைத்த திட்டங்களை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், டேனிஷ் அரசியலமைப்புக்கு எதிரான கருத்துகளைப் போதிப்பவர்களிடமிருந்து  அவர்களது குடியுரிமை பறிக்கப்படும்.
நாட்டின் பல கட்சி பாராளுமன்றத்தில் தற்போது இரண்டாவதாக அதிகபட்ச இடங்களை வைத்திருக்கும் வலதுசாரி டேனிஷ் மக்கள் கட்சி (DPP),  வெளிப்படையாக பேசும் இமாம் அபு பிலால் இஸ்மாயிலை வெளியேற்றும் முயற்சியில் திட்டங்களை முன்வைக்கிறார்கள் என உள்ளூர்காரர்கள் கூறுகிறார்கள்.
denmark danish 1
ஆர்ஃபஸ் நகரத்திலுள்ள க்ரிமோஜ் மசூதியில் இஸ்மாயில் என்பவர் ஒரு முன்னணி இமாம், அவர் யூதர்களை அழிக்கப்போவதாக கூறியுள்ளாதாகவும், சமீபத்தில் வெளியான ஆவணப்படத்தில் அவர் விபச்சார பெண்கள் மீது கல்லெறிவது பற்றி வாதாடுவதும் விசுவாச துரோகிகளை கொலை செய்வது போலவும் உள்ளது.
தீவிர நிகழ்வுகளில் மத சுதந்திரத்தை கட்டுப்படுத்த, ஃபாலோ-அப் சட்டத்தால் டேனிஷ் அரசியலமைப்பு வரம்புகளை திறம்பட விரிவாக்க முடியும்.
“பொது ஒழுங்கிற்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது தார்மீக ஒழுக்கத்திற்கு மாறாகவோ இல்லாத வரையில் யார் வேண்டுமானாலும் அவர்களது எப்படிபட்ட  நம்பிக்கையை வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம் என அரசியல் சாசனத்தில் கூறப்படுவதாக ஜனநாயக முற்போக்குக் குடிவரவு செய்தி தொடர்பாளர் மார்ட்டின் ஹென்ட்ரிக்சென் கூறினார்,” என பொலிடிகோ தெரிவித்துள்ளது.
“இமாம்கள் கல்லெறிதலை ஒப்புதலோ அல்லது பரிந்துரை செய்வதோ, அல்லது ஒரு பெண் அவளது கணவர் மூலம்  வன்முறைக்கு உள்ளாகினார் என்று ஒரு இமாம் கூறுவது  என்னைப் பொருத்தவரையில் பரவாயில்லை , ஏனெனில் அது பொது ஒழுங்கைப் பாதிக்கும் நிலைகுலைக்கும் பேச்சு என்று கூறப்படுகிறது” என்றும் அவர் தொடர்ந்தார்.
“இதில் சில இமாம்கள் டேனிஷ் குடிமக்கள், நாம் அவர்களிடமிருந்து அவர்களது குடியுரிமையை பறிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”
சமூக ஜனநாயகவாதிகள், கூட்டணியின் மிகப் பெரிய குழு, கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகியோரால் இத்திட்டங்கள் ஆதரவு வழங்கப்பட்டு பாராளுமன்றத்தில் மசோதாவிற்கு பெரும்பான்மை சேர்த்து வருகின்றனர்.
அங்குள்ள உள்ளூர் செய்தியின் படி, லிபரல் கட்சியின் குடிவரவு பேச்சாளர் மார்கஸ் நத், “இது ஒரு நல்ல யோசனை” என்று கூறினார்.
 
“இத்தகைய சூழலில் நாம் முடிந்தவரை கீழே வர வேண்டும். நாம் வீம்பான பழைய இமாம்கள் பற்றி மட்டும் இங்கு பேசவில்லை, இந்த மசூதிகள் தான் பல சிரிய போராளிகளை உருவாக்கியது, மேலும் இவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.”
denmark danish 2
கடந்த மாதம் TV2 வில் மோஸ்கீன் பேக் ஸ்லொரெட் அதாவது ‘முகத்திரைக்கு பின்னால் மசூதிகள்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானதிலிருந்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய மனிதராக இருந்த இஸ்மாயில் மேலும் நாட்டில் மத சுதந்திர கட்டுப்பாட்டிற்காக நடக்கும் விவாதங்களில் முன்னணியில் இருக்கிறார். அந்நிகழ்ச்சியில், ஆர்ஃபஸ் நகரத்திலுள்ள க்ரிமோஜ் மசூதியின் இமாம் இஸ்மாயில், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை கல்லெறிந்து சாகடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஃபஸ் மசூதி இது போல் செய்திகளில் வருவது முதல் தடவை அல்ல. 2014 ஆம் ஆண்டிலும் இதேபோல் ஒரு செய்தி வெளியானது அதாவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு மசூதி ஆதரவு தருவதாக ஒரு செய்தித்தொடர்பாளர் கூறினார்.

[youtube-feed feed=1]