“மூடு டாஸ்மாக்கை மூடு” என்று மதுவிலக்குக்காக பாடிய கோவன் மீது தமிழக காவல்துறையினரால் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதே போல தற்போது அறுவர் மீது தேசத்துரோக வழக்கை தமிழக காவல்துறையினர் தொடுத்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி 14ம் தேதி “மக்கள் அதிகாரம்” அமைப்பின் சார்பாக, மதுக்கடை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, தலைமைக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், காளியப்பன், திருநெல்வேலி இளைஞர் டேவிட்ராஜ், ஆனந்தி அம்மாள், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத் தலைவர் தனசேகரன் ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்துள்ளது தமிழக காவல்துறை.
கடந்தவாரம் வழக்கு தொடுக்கப்பட்டாலும் இன்னும் அறுவரில் எவரையும் கைது செய்யவில்லை. இந்த நிலையில், வழக்கை எதிர்கொண்டிருக்கும் ராஜூ, வாஞ்சிநாதன், காளியப்பன் ஆகியோர் நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் தரப்பை தெரிவிக்க உள்ளனர். .