என்னைத்  திட்டுங்கள்; என் மகனை பழிக்காதீர்கள்’ என  விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
_0928555c-f630-11e5-a25a-3bf9e8f27f9b
இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த பெயர் விஜய் மல்லையா. இவரைப்பற்றிச் செய்தி வராத நாட்களும் இல்லை; செய்தி வெளியிடாத ஊடகங்களும் இல்லை. நம் நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கடனை மரியாதையாக திருப்பிச் செலுத்தி விடுங்கள். இல்லையேல் கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என  விஜய் மல்லையாவுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய  விஜய் மல்லையா மீதும் அவர் மகன் சித்தார்த் மீதும் சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது 29 வயது மகனும், நடிகரும்,கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான சித்தார்த் என்ற சித் மல்லையாவுக்கு  ஆதரவாக ‘டிவிட்டரில்’ பாசமழை பொழிந்திருக்கிறார் இந்த கடன்கார தொழிலதிபர் . அதில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது:-
“ எனது தொழிலில் என் மகன் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே, என் மகன் மீது யாரும் பழி சொல்லாதீர்க்கள். என்னை  வேண்டுமானால்  திட்டிக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரங்களில் தனது தந்தை விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக சித் மல்லையாவும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “   எனக்கு வந்து சேரும் 100 டிவிட்கள் என் தந்தைக்கு எதிராகவும் ஒன்றே ஒன்று மட்டும் என் தந்தைக்கு ஆதரவாகவும் உள்ளது.  என் தந்தைக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள் “ என்று குறிப்பிட்டிருந்தார்.