
பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
பி.சுசீலா இசைத் துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவரின் இத்தகைய நெடிய இசைப் பயணத்தையும், சாதனையையும் பாராட்டும்விதமாக அவருக்கு இந்தக் கெளரவம் கிடைத்துள்ளது. அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. 1960 முதல் இன்றுவரை பி. சுசீலா 17, 695 பாடல்களைப் பாடியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel