$1 பில்லியன் முதலீட்டில் இந்தியாவில் புதிய வளாகம் அமைக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டு ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
satya_nadella_microsoft_ceo
 
செப்டம்பர் 29, 2014 அன்று, புது தில்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களும் மைக்ரோசப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நடேல்லாவும் ஒரு ரகசிய சந்திப்பு நடத்தினர். முதல்வரின் பல நெருங்கிய உதவியாளர்களுக்குக் கூட இச்சந்திப்பை பற்றி தகவல் தரப்படவில்லை, மேலும் அங்கு விவாதிக்கப்படும் எந்த விஷயமும் வெளியில் கசியக்கூடாது என மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
sidhdha rammaiaya
ஐந்து ஆண்டுகளில் $ 1 பில்லியன் முதலீட்டில் பிரம்மாண்டமான புதிய வளாகத்தைத் திறக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டிருந்தது. இதற்காக உலகம் முழுதும் தேடிவிட்டு இறுதியில் பெங்களூரில் தான் அந்த வளாகம் அமையவேண்டுமென முடிவெடுத்தள்ளது. மைக்ரோசாப்டின் அனைத்து இந்தியா செயற்பாடுகளிலும் இந்த புதிய வளாகத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்பதும், ஒரு கணிசமான விரிவாக்கம் வழங்க வேண்டுமென்பதும் அவர்களது யோசனையாகும். நடேல்லாவுக்கும் சித்தராமையாவுக்கும் இடையே நடந்த அந்த 30 நிமிட சந்திப்பில் “கிட்டத்தட்ட” ஒப்பந்தம் முடிவாகியிருந்தாலும், மைக்ரோசாப்ட் இன்னும் பல முக்கியமான நுணுக்கமான விஷயங்களிம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
siddaramaiah_karnatka-CM
இந்த சந்திப்பு நடெல்லாவின் காலண்டரில் குறிக்கப்படவுமில்லை, கூட்டத்தின் நிகழ்வுக்குறிப்புகள் பதிவு செய்யப்படவுமில்லை ஏனெனில் இச்சந்திப்பு ஒரு உயர்மட்ட இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.இது நடந்ததற்கான எந்தவொரு தடையத்தையும் அவர்கள் விட்டுவைக்க விரும்பவில்லை. ஏனெனில்,இதற்கான உத்தேச முதலீடு $ 1 பில்லியன், கிட்டதட்ட 5,000-7,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்லது, ” என்று இதன் வளர்ச்சிக்கு காரணமாகவும் நெருக்கமாகவும் இருக்கும் ஒருவர் கூறினார்.
தலைமை நிர்வாக அதிகாரியாக நடெல்லா பொறுப்பேற்று ஏழே மாதங்களான நிலையில், மைக்ரோசாப்டிற்கு ஒரு திருப்பம் கொடுக்க விரும்பி அசூர் போன்ற க்லௌட் சர்வீசஸ் வைத்து  நிறுவனத்தின் மறு சீரமைப்பின் வேலைகள் செய்தது மட்டுமன்றி நோக்கியா கைபேசி தொழிற்சாலையை இழுத்துமூடியது வரை அவரது சாதனை உலகெங்கும் பிரசித்திபெற்றது. அந்த ரகசிய சந்திப்பு நடந்து முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அதன்பின் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இதைப்பற்றி மைக்ரோசப்ட் பதில் கூற மறுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்ற கர்நாடகத் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் வி.மஞ்சுளா அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் கூறியது,” நான் பொறுப்பேற்ற போது அப்படிப்பட்ட முன்மொழிதல் எதுவும் என்னுடைய கவனத்திற்கு வரவில்லை”.
Satya-Nadella 1
இந்தியாவிலேயே ஹைதராபாதில் மைக்ரோசாப்ட் முன்னிலையில் உள்ளது. 54 ஏக்கர் ஹைதராபாத் வளாகத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி,ஐ டி, மற்றும் உலக சேவைகள் உள்ளன. பெங்களூரில் மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி, வளர்ச்சி மையம், உலக தொழில்நுட்ப உதவி மையம் மற்றும் மைக்ரோசாப்ட் வென்சர்ஸ் உள்ளன மேலும் இவை வெவ்வேறு இடங்களில் உள்ளன. இந்தியாவில் 10 நகரங்களில் மைக்ரோசாப்ட்டிற்கு அலுவலகங்கள் உள்ளன, அங்கே 7,000 பேர் பணிபுரிகின்றனர்.