அனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையிலான காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம்.  பிரபலங்களுக்கிடையிலான காதல் பிரபலமாகப் பேசப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. Virat anuska 1
இதற்கிடையில், கோலி நன்றாக சோபிக்கத் தவறிய ஆட்டங்களில், அனுஷ்கா ஷர்மாவை காரணம் காட்டி மக்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். மேலும், கோலியின் தோல்விக்கு அனுஷ்காவை ஏளனம் செய்து ஏசத் தொடங்கினர்.
ஆனால் சமீபத்தில் அவர்கள் இருவரும் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக அவர்களது காதலை முறித்துக் கொண்டனர்.

virat2
ச்சேசிங் மாஸ்டர் கோலி

நடந்துவரும் உலகக்கோப்பை T20 போட்டிகளில் இந்தியா பல ஆட்டங்களில் வென்று தற்பொழுது அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. இதில் கோலியின் பங்கு இன்றியமையாதது. நேற்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியாவுக்கு அசாத்திய வெற்றியை ஈட்டித்தந்தது கோலியின் பிரம்மாண்ட ஆட்டம் மட்டுமே காரணம். ஆனால் இந்த வெற்றிக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் அனுஷ்கா மிகுந்த கேலிக்குள்ளாக்கப்பட்டார்.
அனுஸ்காவை கிண்டலடித்த படங்களில் ஒன்று

அனுஸ்காவை கிண்டலடித்த படங்களில் ஒன்று

வாழ்க்கையில் இருவரும் பல காரணங்களுக்காக வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்து பிரிந்து சென்றிருந்தாலும் அனுஷ்காவை வெறுப்பவர்களுக்கெதிராக குரல் எழுப்பி விராட் நிஜ வாழ்கையிலும் ஹீரோவாக எல்லோர் மனதையும் கவர்ந்துள்ளார்.
“பல நாட்களாக அனுஷ்காவின் மேல் வன்மம் வளர்த்த பலரும் தற்போது நடக்கும் அனைத்து கெட்ட விஷயங்களும் அவரை காரணம் காட்டி வருகின்றனர். படித்தவர்கள் என போற்றிக்கொள்ளும் அவர்களைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன். என் விளையாட்டில் நான் செய்யும் தவறுகளுக்கு அவரை குறை கூறி ஏளனம் செய்யும் ஈனப்பிறவிகளுக்கு நான் கூற விரும்புவது, இதுவரையிலும் அனுஷ்கா என்னை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டினார். எனக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நானே பொறுப்பு. ஆகையால் அனுஷ்காவின் மேல் கோபப்படாமல் இரக்கம் காட்டி அவருக்கு மதிப்பளியுங்கள். உங்களுடைய சகோதரியையோ காதலியையோ மனைவியையோ எவரேனும் பொதுவில் இப்படி கேலியும் கிண்டலும் செய்தால் தங்களால்  தாங்க முடியுமா” என்று கோலி நெருப்பைக் கக்கியுள்ளார்.
 

virat shame2
அனுஸ்காவை தூற்றுபவர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் எனக்கு உந்துசக்தியாகவே விளங்கியுள்ளார்.

விராத் ஜெயித்தால் அனுஸ்காவை கிண்டல் செய்கிறொம். விராத் சோபிக்கத் தவறினால் அனுஸ்காவை திட்டுகிறோம்.  
யுவராஜ் ஜெயிக்கவைத்தால் அவர் வீட்டிற்கு இனிப்பு அனுப்புவதில்லை, ஆனால் அவர் ரன் எடுக்கத் தடுமாறினால், அவர் வீட்டின்மீது கல்லெறிகிறோம்.
சபாஸ். மெத்தப் படித்த சமூகம் நாம் ! 
இதுதான் முன்னேரும் சிறந்த சமூகத்தின் குறியீடா ?

பத்திரிக்கை.காம்  பெண்களுகெதிரான ஏளனச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.
முன்னாள் காதலிக்காக குரல் கொடுத்த விராத் கோலியின்  மனிதாபிமானத்தை வெகுவாக பாராட்டுகின்றது.