
தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக குற்றம்சாட்டியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
7 நாட்களுக்குள் கருத்தை திரும்ப பெறாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு வைகோ, ’’சட்ட ரீதியாக அவர்கள் அனுப்பிய நோட்டீசை சட்ட ரீதியாக சந்திப்பேன். நீதிமன்றத்திற்கு அவர்கள் வரட்டும். அவர்கள் நோட்டீசு அனுப்பியதையும், வழக்கு போடுவதாக கூறியதையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel