
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களை தொகுதி வாரியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார்.
கடந்த 6ம் தேதி, 21ம் தேதி, 22ம் ந்தேதி ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர் தேர்வு நடை பெற்றது.
புதன்கிழமை வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. நேற்று வேலூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற இந்த நேர்காணலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று 5வது நாளாக தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தி வருகிறார்.
Patrikai.com official YouTube Channel