2016,மார்ச்,24, புனித வியாழனன்று, முஸ்லீம், இந்து, கத்தோலிக்க அகதிகளின் கால்களை கழுவிய போப் ப்ரான்சிஸ், ‘நாங்கள் சகோதரர்கள்” என்கிற அழுத்தமான செய்தியை உலகிற்கு செப்பியுள்ளார்.
வருடாவருடம் புனிதவெள்ளிக்கு முதல்நாளான வியாழக்கிழமையன்று பாத பூஜை எனும் கால்-சலவை சடங்கினை கிறிஸ்தவர்கள் செய்வது வழக்கம்.
கால்-சலவை சடங்கு: இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட தினத்திற்கு முன்தினம், அவரது சீடர்களுக்கு பாத பூஜை செய்து, ஏழைகளுக்கு சேவை செய்வதை வலியுறுத்தினார். அதனை நினைவு கூரும் வகையில், புனித வியாழனன்று கால்-சலவை சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
[youtube https://www.youtube.com/watch?v=NqOSha0S7WE]
போப் அவர்கள், முஸ்லீம், இந்து, கத்தோலிக்க அகதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டார். ‘நாங்கள் சகோதரர்கள்” என்கிற அழுத்தமான செய்தியை உலகிற்கு செப்பியுள்ளார். இவரின் சகோதரத்துவ உபசரிப்புச் செய்கை, இந்தியா உட்பட உலகெங்கும் முஸ்லிம் விரோத மற்றும் அகதிகள் எதிர்ப்பு மனப்பான்மை பெருகிவரும் சூழலில் , புருசெல்ஸ் தீவிரவாதத் தாக்குதளுக்கிடையே மிகுந்த முக்கியத்துவம் அடைகின்றது.
ரோம் நகரில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்டெல்நோவோ டி போர்டோ வில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்ற போப் பிரான்சிஸ் அங்குள்ள அகதிகளுக்கு பாதபூஜை செய்து அனைவரும் ஒரு தாய்ப் பிள்ளைகள் என்று அறிவித்து வரவேற்றார்.
அவர் எந்த பாகுபாடும் இன்றி முஸ்லிம், இந்து, கத்தொலிக்க அகதிகளின் பாதங்களை சுத்தம் செய்து, முத்தமிட்டார்.
ஆண்களுக்கு மட்டுமே நடத்தப் பட்டு வந்த இந்த சடங்கை, தாம் பதவியேற்ற 2013 ஆம் ஆண்டு முதலே, பல முற்போக்கு செய்கைகளை செய்து வந்தார் “போப் ஃப்ரன்சிஸ்”. குறிப்பாக சென்ற ஆண்டு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளைக்கு சென்ற அவர், அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாத பூஜை செய்தார்.
கடந்த ஜனவரி மாதம், பெண்களுக்கும் சடங்கு செய்ய சட்டத்தினை மாற்றினார்.
2013ம் ஆண்டு, ஓரின தம்பதிகளையும் அங்கிகரித்து ஆலயதிற்குள் அனுமதிக்க மறைமுகமாக ஆதரவு அளித்தார். அவர் ” ஒரு ஓரினச் சேர்க்கையாளர், கடவுளைத் தேட வேண்டி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டால் , அந்த தனி மனிதனின் விருப்பதிற்கு குறுக்கே நிற்பது தவறாகும். கடவுள் முன் இந்த மனிதர்கள் தோன்றினால், கடவுள் இவர்களை எதிர்த்து புறக்கணிப்பாரா அல்லது அரவணைப்பாரா என பதில் கூறுங்கள். எனவே, நாமும் அனைதுவிதமான மனிதர்களையும் பரிவுடன் அரவணைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில், 12 பேருக்கு பாத பூஜை செய்யப் பட்ட்து.
போப் பாதபூஜை செய்த பேரில், நைஜீரியாவைச் சேந்த 4 கத்தோலிக்கர்களும், மாலி, சிரியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்களும், இந்தியாவைச் சேர்ந்த இந்துவும் அடங்குவர்.
இந்தியாவின் பிரதமர், மோடி முஸ்லிம் தலைவர்கள் அணிவித்த குல்லாவினை அணியமறுத்தவர் என்பதுடன் ஒப்பிடுகையில் போப்பின் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் செயல் பாராட்டத்தக்கது.
போப்பின் இந்த மனிதாபிமானமிக்க செயல், அகதிகளின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
அவர்கள் அனைவரும் போப்பினை ஆரத்தழுவி, அவருடன் செல்ஃபி யும் எடுத்துக்கொண்டனர்.