
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தொகுதிப்பங்கீடு குறித்துபேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவருடன் காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் வந்தார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் 11.20 மணிக்கு கருணாநிதியை சந்தித்தனர். தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் இருந்தார். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., துரைமுருகன் உடன் இருக்கின்றனர்.
Patrikai.com official YouTube Channel