தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுவாக அதிமுக – திமுக என 2 முனைப் போட்டியே இருக்கும். ஆனால், இந்த முறை 5 முனை போட்டி உருவாகியுள்ளது.
1. தேமுதிக தலைவர் விஜயகாந்த், திடீரென மக்கள் நலக் கூட்டணியினருடன் இணைந்துள்ளார். இதனால் தமிழக தேர்தல் களம் மாறிப் போய் உள்ளது.
2. அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்பட வேறு சில கட்சிகள் இடம்பெற உள்ளன. தமாகாவும் அதிமுக அணியில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
3. திமுக அணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
4. பாமக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸும் அறிவிக்கப்பட்டு, அவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
5. பாஜகவும் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது.
– இதனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.