rail
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை ஒதுக்கீடு முறை முதன்முதலாக 2007-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது இரண்டாம் வகுப்பு, ஏ.சி. 3 அடுக்கு, ஏ.சி. 2 அடுக்கு பெட்டிகளில் தலா 2 கீழ் படுக்கைகள் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டது.
இது கடந்த ஆண்டு 4 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி இரண்டாம் வகுப்பு, ஏ.சி. 3 அடுக்கு, ஏ.சி. 2 அடுக்கு பெட்டிகளில் தலா 4 கீழ் படுக்கைகள் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கீழ் படுக்கை ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுத்தான் கீழ் படுக்கை ஒதுக்கீட்டை அதிகரித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இரண்டாம் வகுப்பு, ஏ.சி. 3 அடுக்கு, ஏ.சி. 2 அடுக்கு பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு பெட்டியில் தலா 6 கீழ் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் ஒவ்வொரு ரயிலிலும் மூத்த குடிமக்களுக்கு சுமார் 80 முதல் 90 கீழ் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இது ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.