
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு மேல் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வந்தனர். அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயகாந்த் பேசியபோது, ‘’கூட்டணியின் தலைவராக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. மக்கள் நலக்கூட்டணியில் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதில் இருந்து என்னை மாற்றிக்கொண்டேன். நான் எந்தப்பக்கமும் செல்லாமல் மக்கள் நலக்கூட்டணியின் மக்கள் நலன் கூட்டணியில் இணைந்துள்ளேன்.
மக்கள் நலக்கூட்டணிக்கு மட்டும் அண்ணன் வைகோ ஒருங்கிணைப்பாளர் அல்ல; தேமுதிகவுக்கும் அண்ணன் வைகோதான் ஒருங்கிணைப்பாளர். மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிட்டாலும், கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும். நான் திருமாவளவனிடம் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். கூட்டணி ஆட்சிதான் என்று. அதில் எந்த மாற்றமும் கிடையாது. தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான்’’என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel