ஓடுபொறி, ஓடுபாதை, புல்தரை – இம்மூன்றில் எது சிறந்தது எனும் கேள்வி நீங்கள் ஒரு வழக்கமான ஓட்டப் பழகுநர்(jogger/runner) என்றால், ஒருமுறையேனும் மனதில் தோன்றியிருக்கும்.
நீங்கள் வழக்கமான நேரத்தில் உடற்பயிற்சி செய்ய ஜிம், அல்லது அதிகாலை பூங்கா எனத் தலைக்காட்ட வெட்கப் படாதவரா ? அப்படியெனில் இம்மூன்று இயக்க பரப்புகளில் உள்ள வித்தியாசத்தை தங்களால் கூறமுடியும்.
ஓடுபாதையிலோ அல்லது வீட்டிற்குள்ளோ, மக்கள் ஏதாவது ஒருவகையைத் தொடர்ந்து பின்பற்றவே விரும்புவர்.
வெகுசிலருக்கே தண்ணீர், பனி, புல் மற்றும் சுவடுகள் என மாறுபட்ட தளங்களில் இலாவகமாக ஓடத்தெரியும்.
பொதுவெளியில் ஓட கூச்சப்படுபவர்களுக்கு ,வீட்டிற்குள்ளே ஓட ஓடுபொறி (ட்ரட்மில்) உள்ளது.,
ஓடுபொறி மின்சாரத்தில் இயங்குவதால் உங்களுக்கு வசதியான வேகத்தில் இயக்க உதவும். மேலும், காற்று எதிர்ப்பு போன்ற பொதுவெளியில் ஓடுமபவர்களுக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் ஏர்படாமல் இருக்க ஓடுபொறி உதவுகிறது.
எனினும், வெவ்வேறு தளங்களில் இயங்கும் போது அது உங்கள் உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ?
சாலைகளில்ஓடுபவர்கள் பெரும்பாலும் ஒரு காபி கடை அல்லது ஒரு ஓட்டலில் நுழைவது சாதாரணம். கடின நடைபாதைகளில் ஓடுவது, மூட்டுகளில் கடுமையான வழியினை ஏர்படுத்தும். மேலும், இந்தியச் சாலைகளில் சாலைப்போக்குவரத்து மட்டுமின்றி சாலையில் உள்ள குழிகள் குறித்தும் விழிப்புடன் ஓட வேண்டும்.
கால் மற்றும் கணுக்கால் சர்வதேசம் எனும் இதழ், 2008 ல் வெளியிட்ட வெவ்வேறு இயங்கும் மேற்பரப்பில் என்ன பாதிப்பு ஏற்படுகின்றது என்கிற ஆய்வு முடிவின் படி, 291 பேர் டெண்டினோபதி (தசைநார் காயம்) த்தால் பாதிக்கப்பட்டனர்.
பின்வரும் பரப்புகளில் இயங்கும் போது ஏற்படும் சில நன்மைகளும் தீமைகளும் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன:
ஓடுபாதையில் இயங்கும் போது:
நன்மைகள்: சாலையொரத்தைவிட ஓடுபாதையில் ஓடும்போது உங்கள் உடலுக்கு பாரம் குறைவாக இருக்கும். மேலும் வேகமான உடற்பயிற்சிகளையும் செய்ய ஏதுவாக இருக்கும்.
தீமை: ஒரே வட்டப் பாதையில் ஓடும்போது, அதே திசையில் ஓடுவதால் காலில் அழுத்தம் அதிகரிக்கும். இதனை தடுக்க, ஒவ்வொரு சுற்றுக்குபின் ஓடும் திசையை மாற்ற வேண்டும்.
புல்லில் ஓடும்போது:
நன்மைகள்: புல்லில் ஓடும்போது, குறைந்த தாக்கத்தை உண்டுபன்ணுவதால், உங்கள் கால்களை கடினமாக வேலை செய்ய வைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்து கால்கள் உறுதியடைய செய்யும்.
பாதகங்கள்: சீரற்ற மேற்பரப்பில் ஓடும்போது காயமடையும் அபாயம் அதிகரிக்கும். புல் ஈரமானதாக இருந்தால் கால்கள் வழுக்கும்.
டிரெட்மில்லில் இயங்கும் போது:
நன்மைகள்: தூர அளவு மற்றும் இதய துடிப்பு விகிதம் திரைகள் தோன்றுவது போன்ற சிறப்பு அம்சங்களை ஓடுபொறி கொண்டுள்ளதால், உடற்பயிற்சியின் பலன்களை சிறப்பாக கண்காணிக்க முடியும்.
தீமை: ஸ்பைன்(Spine) சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஓடுபொறியில் உள்ள பஞ்சணை (குஷன்) மேற்பரப்பு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றது.
இடுப்பு, முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி அழுத்தம் உண்டாக்கும். எனவே ஓடுபொறியின் மேற்பரப்பு சோதனைச் செய்யப்படுவது அவசியமானதாகும்.
தொப்பையை குறைப்பதற்காக ஓடி, மூட்டுவலியை வாங்கிவிடாதீர்கள்.