
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை மாலை 5 மணிக்கு ஆயிரம் பிறை கண்ட அபூர்வ நிகழ்வை அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கவுரவிக்கும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். மேலும் மேகாலய கவர்னர் சண்முகநாதன், பாஜக செயலாளர் ராம்மாதவ், சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.
பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷா வருவதால் கூட்டணி குறித்து பேசுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel