stalin-vijayakanth
மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா இன்று கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார். அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தே.மு.தி.க.வுடன் பேச்சு நடப்பதாக கருணாநிதி கூறியிருக்கிறாரே? எங்கு, யார் மூலம் பேச்சு நடக்கிறது? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’உங்க (நிருபர்கள்) கிட்டதான் நாங்கள் பேசிக் கொண்டு இருக்கிறோம். நீங்கள்தான் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். தலைவர் தெளிவாக சொல்லியிருப்பதை புரிந்து கொள்ளாமல் அதை மிகைப்படுத்தி சிலர் விமர்சனம் செய்து, செய்திகள் போட்டதால்தான் இந்த கோளாறு.
இப்போதும் சொல்கிறேன், ஏற்கனவே தலைவர் தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்தது உண்மை. அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரது உரிமை. அந்த உரிமையில் தலையிட ஜனநாயக அடிப்படையில் எங்களுக்கு உரிமை இல்லை. அந்த அடிப்படையில்தான் ஏற்கனவே விடுத்த அழைப்பு அப்படியே உள்ளது.
ஏதோ புதிதாக அழைப்பு விடுத்தது போலவும், பேச்சுவார்த்தை நடத்தியது போலவும் எதுவும் இல்லை. அப்போதும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இப்போதும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதுதான் உண்மை’’ என்று தெரிவி்த்தார்.