இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் 4 ஆயிரத்து 802. அதில் தற்போது 3 ஆயிரத்து 894 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான 908 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 114 பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்கள் 517.
மேற்கு வங்காளத்தில் அனுமதிக்கப்பட்ட 347 பணியிடங்களில் 88 பணி இடங்கள் காலியாக உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் 215 பணியிடங்களில் 143 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை பொறுத்தமட்டில் 188 பணியிடங்களில் 109 பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இதே போல் மராட்டியம், மத்திய பிரதேசம், காஷ்மீர், மற்றும் யூனியன் பிரேதங்களிலும் கணிசமான ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.