போலிக்கணக்கு
போலிக்கணக்கு
 
 
திடீரென ஒரு நாள் நீங்கள்  ஃபேஸ்புக் பக்கத்தை திறக்கும்போது உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து கோரிக்கை வந்ததென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்-சற்றும் தாமதிக்காமல் அவர் தான் தனது பெயரில் புதிய கணக்கொன்றை ஆரம்பித்திருக்கிறார் என்றெண்ணி அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா????
அது மிகவும் தவறு.
அப்படிச் செய்யாதீர்கள்.  கடந்த சில நாட்களாக, பல பேருடைய ஃபேஸ்புக் கணக்குகள் மோசடிக்காரர்களால் அபகரிக்கப்பட்டு அவர்களது நண்பர்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்கிறார்கள்.
ஒரு போலிக்கணக்கை உருவாக்க அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய சுயவிவர புகைப்படமும் பெயரும் மட்டும் தான். பிறகு அவர்கள் உங்கள் பதிவுகளிலும் புகைப்படங்களிலும் குறிப்படப்பட்டுள்ள உங்களுடைய நண்பர்களுக்குக் கோரிக்கைகளை அனுப்பவர்.
இதற்குப் பிறகு அவர்கள் உங்களுடைய பெயரில் பதிவுகளை எழுதவும், பகிரவும், உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடைய விவரங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும் அல்லது ஆபாசமான புகைப்படங்கள்/பதிவுகள் போடக் கூட,  அதாவது கிட்டத்தட்ட எதை வேண்டுமானாலும் செய்ய வாய்ப்புள்ளது. இதில் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் இதன் பின்விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகையால் உங்கள் கணக்கில் முன்னரே இருக்கும் நண்பரிடமிருந்து கோரிக்கை வருமேயானல் உங்கள் நண்பரைத் தொடர்பு கொண்டு அது அவர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்,  அப்படி அது அவர்கள் இல்லையெனில் அது போலிக்கணக்கெனப் புகாரளியுங்கள்.
இது நமக்கும் நடந்துவிடுமோ என நீங்கள் கவலைப்படுபவராக இருந்தால் உடனே உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கில் தனியுரிமை அமைப்புகளை (Privacy settings) மேம்படுத்தி உங்களுடைய பதிவுகளையும் புகைப்படங்களயும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் மட்டுமே பார்க்கும்படி செய்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.