வீடுகள், கோயில்களில், மக்களிடம் உள்ள தங்கத்தை டெபாசிட் பெறும் வகையில் தங்க டெபாசிட் திட்டம், தங்கப் பத்திர முதலீடு ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி தங்கப் பத்திரங்கள் 2 முறை வெளியிடப்பட்டன. முதல் கட்டமாக நவம்பரில் வெளியிடப்பட்டபோது, ரூ.246 கோடி மதிப்பிலான 915.95 கிலோ தங்கத்தில் மக்கள் முதலீடு செய்தனர். இரண்டாவது முறையாக ஜனவரியில் வெளியிடப்பட்டபோது ரூ.746 கோடி மதிப்புடைய 2,872 கிலோ தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 8 ஆம் தேதி 14 ஆம் தேதி வரையில் 3 வது தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ.329 கோடி மதிப்புடைய 1,128 கிலோ தங்கத்தில் முதலீடு கிடைத்துள்ளது. இதில் முதலீடு செய்ய 64,000 பேர் விண்ணப்பித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். மத்திய அரசின் மூன்றாவது தங்கப் பத்திர திட்டத்துக்கு இரண்டாவது திட்டத்தில் கிடைத்த முதலீட்டில் பாதிதான் கிடைத்துள்ளது. இதுவரை மூன்று தங்கப் பத்திரங்கள் திட்டங்கள் மூலம் ரூ.1,322 கோடி மதிப்புடைய 4,916.253 கிலோ கிராம் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் பிரசித்தி பெற்ற சித்தி வினாயகர் ஆலயம் 200ஆண்டு பழமை வாய்ந்தது. காணிக்கைகள் மூலம் 160 கிலோ தங்கம் இக்கோயிலுக்கு கிடைத்துள்ளது. இதில் 44 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளது.