தினமும் நடைப்பயிற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
‘மாதம் ஒரு மராத்தான்’ (Marathon a Month) என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த திட்டத்தில், பொதுமக்கள் தினமும் சுமார் 30 நிமிடங்கள் நடந்து, மாதத்திற்கு மொத்தம் 42 கி.மீ. தூரத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த இலக்கை எட்டுபவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி செய்தியின்படி, இந்த திட்டம் 2027 ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது செல்போன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒலிம்பிக் பதக்க வென்றவரும், கிரேட் நார்த் ரன் போட்டியின் நிறுவுநருமான சர் பிரெண்டன் ஃபோஸ்டர் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கிறார். இது இங்கிலாந்து அரசின் 10 ஆண்டு சுகாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இங்கிலாந்தில் ஏற்படும் ஒவ்வொரு 6 மரணங்களில் ஒன்று உடல்செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒருவர் வாரத்திற்கு 30 நிமிடங்களுக்கும் குறைவாக உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டால், அவர் உடல் செயலற்றவராகக் கருதப்படுகிறார்
மேலும், 2025 நவம்பர் நிலவரப்படி, அந்நாட்டில் சுமார் 1.2 கோடி பெரியவர்கள் போதுமான உடல் இயக்கம் இல்லாமல் வாழ்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
[youtube-feed feed=1]