இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நாளை (நவம்பர் 6) முதல் குறிப்பிட்ட வகையான ஆபாசப் படங்களை வைத்திருப்பதும், வெளியிடுவதும் குற்றமாக்கப்படுகிறது.

Crime and Policing Act 2026 என்ற புதிய சட்டத்தின்படி, பின்வரும் வகையான ஆபாசக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • கழுத்தை நெரிப்பது அல்லது மூச்சுத் திணறச் செய்வது போன்ற காட்சிகள்.
  • உறவினர்களைப் போலத் தோற்றமளிக்கும் நபர்கள் அல்லது உறவினர்களாக நடிப்பவர்களுக்கு இடையிலான பாலியல் உறவுக் காட்சிகள். வளர்ப்புப் பெற்றோர், வளர்ப்புப் பிள்ளைகள் போன்ற உறவுகளாக நடிப்பதும் இதில் அடங்கும்.
  • 16 வயதுக்குக் குறைவான குழந்தைகளைப் போலப் பெரியவர்கள் நடித்து இடம்பெறும் பாலியல் காட்சிகள்.

மீறினால் என்ன தண்டனை?

  • கழுத்தை நெரித்தல் மற்றும் உறவினர்களுக்கு இடையிலான பாலியல் காட்சிகள் தொடர்பான ஆபாசப் படங்களை வைத்திருந்தால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை.
  • 16 வயதுக்குக் குறைவான குழந்தைகளைப் போலப் பெரியவர்கள் நடிக்கும் ஆபாசப் படங்களை வைத்திருந்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை.
  • தடை செய்யப்பட்ட இத்தகைய ஆபாசப் படங்களை வெளியிட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்தப் புதிய சட்டம் நவம்பர் 6 முதல் அமலுக்கு வருகிறது.