சென்னை: டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவை – தவெகவின்ர் தங்களது ஆதரவாளராக வளைத்துள்ள நிலையில், த.வெ.கவினர் செய்த அசிங்க அரசியல இனியும் தொடர்ந்தால் விட மாட்டேன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மாநிலத்தில், ஜனநாயகத்தைக் காக்க, தவெகவினரை மக்கள் முன்னால் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவைக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற்று, மே 4ந்தேதிவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக, தவெக இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மையான 118 தொகுதிகள் கிடைக்கவில்லை. அதுபோல திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்விஅடைந்ததும், பேசும்பொருளாக மாறியது.
ஆனால், முதன்முறை தேர்தல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தவெக முயன்ற நிலையில் பெரும்பான்மை இல்லையென கூறி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது.
அதே நேரம் அதிமுக – பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றிருந்த ஒரேஒரு எம்எல்ஏவான அமமுக எம்எல்ஏ காமராஜ் திடீரென தவெகவிற்கு பல்டி அடித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநரிடம் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது தவெகவிற்கு ஆதரவு என்ற கருத்தை காமராஜ் கூறியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கட்சியில் இருந்து காமராஜை நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசுக்கு ஆதரவான வாக்களித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால், தவெக பெரும்பான்மைகக்காக மாற்று கட்சிகளின் எம்எல்ஏக்களை வளைக்க குதிரை பேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாகவே அமமுக வேட்பாளரை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், விமர்சிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]