அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற போர் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு பின் ஓய்ந்தபோதும் போர்நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் இடையே இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈடுபட்ட நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போனது.
இந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தொடர்ந்து மூடியிருப்பதும் அதனை முற்றுகையிட அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா ஆர்வம் காட்டியதை அடுத்து இந்த வார இறுதியில் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதனன்று துருக்கி சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் பின்னர் சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றால் பாகிஸ்தான் செல்லவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்கும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
நாடு முழுவதும் இருந்து 10,000 போலீசார் இஸ்லாமாபாத் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி மாகாணங்களில் போக்குவரத்து தடைகள் விதிக்கப்பட்டு கடும் கண்காணிப்பு தொடங்கியுள்ளது.
மார்கெட்டுகளை மூடவும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலையில் ஒரு வார காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]