சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 11 நாட்கள் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, மார்ச் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த வண்டலூரில் , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இது 602 ஹெக்டேர் (1,490 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது மற்றும் தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த பூங்காவில் உள்ள வன உயரினங்களை கண்டுகளிக்க தினசரி நூற்றுக்கணக்கான வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், பூங்கா பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள் மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், ‘வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அவசர பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவும், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம் மற்றும் மான் சபாரி சேவை மார்ச் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூடப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]