லண்டன்: அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும்  போரால் கச்சா எண்ணை விலை உயர்ந்து, உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், இந்த    விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை நடத்துகிறது.

போரால், கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளதால்,  உலகளவில் எரிபொருள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், அதை கட்டுப்படுத்துவது குறித்து, இன்று ஜி7 நாடுகள் ஆலோசனை நடத்துகிறது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் உக்கிரமாக தாக்குவதால் வளைகுடாவில் பதற்றம் நீடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால்,  உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதாவது  கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு (இந்திய ரூபாயில் ரூ.9,221.34) மேல் உயர்ந்தது.  இது மேலும் உயர்ந்து, 150 டாலரைத் தாண்டி (ரூ.13,841.80) எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.    உக்ரைன் போருக்குப் பிறகு எண்ணெய் விலைகள் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை. ஈரான் போர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில்  விண்ணை முட்டும் எண்ணெய் விலையை நிவர்த்தி செய்ய  எG7 நிதி அமைச்சர்கள் நேற்றும், இன்றும் ( மார்ச் 9-10 தேதிகளில்) அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில், , சர்வதேச எரிசக்தி நிறுவனத்துடன் (IEA) மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களை (SPR) ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் வெளியிடுவது குறித்து விவாதித்தபோது, ​​தேவைப்பட்டால் செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும்,   400 மில்லியன் பீப்பாய்கள் வரை கூட்டு வெளியீடு பரிசீலிக்கப்பட்டாலும், சந்தை நிலைமைகள் ஒரு முக்கியமான வரம்பை எட்டுகிறதா என்பதைத் தீர்மானிக்க குழு கண்காணிப்புக்கு முன்னுரிமை அளித்து வருவதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உட்பட முன்னணி தொழில்மயமான நாடுகளின் குழுவாகும்.

[youtube-feed feed=1]