2015ம் ஆண்டு பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்..

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகள், நேரடி பயன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

2015 முதல் 2022 வரை ₹10,000 கோடி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது வெளியாகியுள்ள CAG அறிக்கை, நடந்தது பயிற்சி அல்ல மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் மொத்தம் சுமார் 95 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த 95 லட்சம் பேருக்கும் தலா ₹5,500 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் ஆனால் 95 லட்சம் பேரில் 90 லட்சம் பேரின் வங்கி கணக்கு எண் பதிவு செய்யப்படவில்லை.

தவிர மீதமுள்ள 5.25 லட்சம் பேரின் விவரத்திலும் மோசடி நடந்துள்ளது, ஒரே வங்கி கணக்கு 52000 பேருக்கு பதிவேற்றப்பட்டுள்ளது, பலரின் வங்கி கணக்கு எண் 11111 / 1234
/ 56789 என்று பதிவிடப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கே இப்படியென்றால் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மோசடி குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை, 11111 என்றும் abc@gmail.com என்றும் பதிவேற்றப்பட்டது.

மேலும், இந்த 95 லட்சம் பேருக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சியளித்ததாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் உச்சகட்டமாக, NMP என்ற ஒரு நிறுவனம் 33,000 பேருக்கு பயிற்சி அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நிறுவனங்களுக்கான விதிப்படி ஒவ்வொரு batch-க்கும் குழு புகைப்படம் எடுத்து upload செய்ய வேண்டும்.

ஆனால், NMP நிறுவனம், ஒரே புகைப்படத்தை பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என வெவ்வேறு மாநிலங்களில் வேறு வேறு batchகளுக்கு வெவ்வேறு கோணங்களில் பதிவேற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களின் DP கூட ஒரே புகைப்படம் பல பேருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலவற்றில் புகைப்படத்தை மட்டும் மாற்றி ஒரே கையெழுத்து போடப்பட்டுள்ளது.

மருத்துவம் தொடர்பான பயிற்சி என்று விளம்பரப்படுத்திவிட்டு ஊடக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, இப்படி இந்த திட்டத்தின் மொத்த உள்ளீடுகளும் போலி என்பது தெரியவந்துள்ளது.

ஜிம் பயிற்சியாளர் என்ற பயிற்சிக்கு 33 ஜிம் மற்றும் 30,000 trainerகள் அதாவது ஒரு சாதாரண ஜிம்மில் ஒன்றிரண்டு அல்லது அதிகபட்சமாக 5 டிரெய்னர்கள் இருப்பார்கள் என்றால் இங்கு ஒரு ஜிம்முக்கு 900 டிரெய்னர்கள் இருப்பதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் பயிற்சி மையங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்பது விதி, ஆனால், ஆஷிஷ் சான்வால் என்ற பெயரில் ஒரு அதிகாரி ஒரே நாளில், ஆந்திரா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் PMKVY என்ற திட்டம் ஒரு மோசடி நாடகம் என்பது CAG அறிக்கை மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

₹10,000 கோடி செலவழித்து மக்களுக்கு திறன் கற்றுக்கொடுப்பதாக கூறி உண்மையில் நாட்டை எப்படி கொள்ளையடிப்பது என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்!

[youtube-feed feed=1]