சென்னை:  முதல்கட்டமாக 1000 பேருக்கு பணி நிரந்தரம்  என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உத்தரவாததைத் தொடர்த்நது, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த செவிலியர்கள், தமிழக அரசின் வாக்குறுதியை ஏற்றுத் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, போராடிய செவிலியர்களை காவல்துறை கொண்டு அடக்முறை கையாண்டு, அவர்களை கைது செய்த நிலையில், அவர்களின் ஓலம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை காண்ட  பொதுமக்களின் திமுகஅரசின் கெடுபிடிக்களை கடுமையாக விமர்சித்து வந்தனர். இருந்தாலும்,  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், “காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது என கூறி வந்தார்.

மேலும்,  போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது. செவிலியர் பணியில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்” என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், செவிலியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மட்டுமின்றி மருத்துவமனை வளாகத்திற்குள்ளும் போராட்டங்களை தொடர்ந்தனர். இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்ட குழுவினருடன்  பேசசுவார்த்தை நடத்தினார். இதில் போராட்டத்திற்கு முடிவு எட்டப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையில் நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம், முதற்கட்டமாக 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள்  பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் காலப்போக்கில் படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்றார்.

ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி, மத்திய அரசின் மகப்பேறு சட்டம் 1961-ன் படி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

 கொரோனா காலத்தில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டவர்களில் விடுபட்ட 724 செவிலியர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

முன்னதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் கடந்த 19.12.2025 மற்றும் 22.12.2025 ஆகிய தேதிகளில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு சென்ற அமைச்சர், இன்று (24.12.2025) மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. அரசின் இந்த முடிவினை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொள்வதாகச் செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.

நான்கரை ஆண்டுகால சாதனைப் பட்டியல்:

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு செவிலியர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சர் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்:

கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

2024-ஆம் ஆண்டில் மட்டும் 1,693 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர்.

ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் ரூ.14,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பதவி உயர்வு அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2,500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கண்காணிப்பாளர் மற்றும் போதகர் நிலைகளுக்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஒப்பந்த செவிலியர்களின் நீண்ட காலக் கோரிக்கைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]