சென்னை:  கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

80வயதாகும் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவ்வப்போது உடல்நலம் குறித்து முழு உடல்நலப் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம். அதன்படி, தற்போது,   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனைக்காக பினராயி விஜயன் அனுமதிக்கப்படுவார். அந்த வகையில், வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக பினராயி விஜயன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனைகள், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. இ

துதொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விரிவான விளக்கத்துடன் விரைவில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது நோய் குறித்து ஆரம்பத்தில் தெரிய வந்ததும், கடந்த 2018ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து, தொடர் சிகிச்சைக்காக  ஆண்டுக்கு  ஒருமுறை அமெரிக்கா சென்று வருகிறார். இடையில், சென்னையில் உள்ள அப்போலோவிலும் உடல்நல பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

[youtube-feed feed=1]