சென்னை: மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்த அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது.

2025 ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.ஏற்கனவே திமுக, அதிமுக என இரு கூட்டணிகளி உள்ள நிலையில், இந்த முறை தவெக தனி கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்தே களம் காண்கிறது. இதனால் 4முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார். வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித் ஷா, நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில், அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தகூட்டணியில் இதுவரை எந்தவொரு கட்சியும் சேர முன்வராத நிலையில், அதுகுறித்து விவாதிக்கவும், தேமுக, பாமக, உள்பட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சமீபத்தில் டெல்லி அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். முன்னதாக ஓபிஎஸ் – அமித் ஷா சந்திப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் வாரத்தில் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமித்ஷா தமிழ்நாடு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]