சென்னை: சென்னை எண்ணூர் அருகே கொலை வழக்கில் ரவுடியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்ததாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக  குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதற்கு பதிலாக சுட்டு பிடித்து வருவது பேசும் பொருளாக மாறி உள்ளது.  இது மனித உரிமை  மீறிய செயல் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாக குற்ற வழக்குகளில், ஒருவரை கைது செய்ய பல்வேறு விதிகள் உள்ளன. ஆனால், சமீப காலமாக தமிழ்நாடு காவல்துறை வரம்புமீறி செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே , சாத்தான்குளம் தந்தை மகன் கொலை,  அஜித்குமார் என்ற காவலாளி, காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொல்லப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சமீப காலமாக குற்றவாளிகள் சுட்டு பிடிக்கப்படுவதாக காவல்துறை கூறி வருவதும், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினருக்கு திறமை இல்லையா? அல்லது பிடித்து வைத்துக்கொண்டு காலில் சுடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனரான என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் அத்துமீறலுக்கு விரைவில் பதில் சொல்ல வேண்டியது வரும் என சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும்  தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,   சென்னை எண்ணூரில் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரௌடியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்ததாக தெரிவித்து உள்ளனர். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி விக்கி எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உதவி ஆய்வாளர் நவீன் தலைமையிலான போலீசார் ரௌடி விக்கியை பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால்,  போலீசார் அவரை காலில் சுட்டுப் பிடித்து கைது செய்துள்ளனர்.

ரௌடியை துப்பாக்கிச் சூட்டு பிடித்த காவல் உதவி ஆய்வாளர் நவீன், துப்பாக்கிட்டில் காயமடைந்த ரௌடி விக்கி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]