திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து 2017ம் ஆண்டு ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
மேலும், ககன்யான் திட்டத்திற்காக 8ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக கூறியவர், குலசை ராக்கெட் ஏவுதளமானது, “ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ஏவுதளமாக இருக்கும் என்றும் கூறினார்.

இஸ்ரோ தலைவர் நாராயணன், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்தார். அங்கு விஞ்ஞானி களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இஸ்ரோன் கனவு திட்டமான, ககன்யான் திட்டம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை குறித்து‘ கூறினார்.
இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, அவர்களை பத்திரமாக திரும்பக் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ககன்யான் திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றனர். அதற்கான ராக்கெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாம் தயாரிக்கும் ராட்கெட் மூலமே விண்வெளிக்கு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் பயிற்கிகள் வழங்கப்பட்டு வருகின்றனர், விண்வெளியில் வீரர்களுக்கு தேவையான வெப்பநிலை, அழுத்தம், கார்பன் டை ஆக்சைடு, ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அமைப்பின் மேம்பாட்டுப் பணிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ராக்கெட் ஏவுதலின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களின் உயிரைப் பாதுகாக்க, அவர்களை பத்திரமாக வெளியேற்றும் அமைப்பின் பணியும் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இத்திட்டத்திற்காகக் கிட்டத்தட்ட 8,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மனிதர்களை விண்ணுக்கு கொண்டு செல்லும் ககன்யான் விண்கலத்தை 2027-இல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, ஆட்கள் இல்லாத மூன்று பரிசோதனை ராக்கெட்டுகள் அனுப்பப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க, 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும்.
இந்த விண்வெளி நிலையம் மொத்தம் 5 தொகுதிகளாக உருவாக்கப்படும். முதல் தொகுதி 2028-ல் விண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.
2023-ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரபட்டினம் ஏவுதளத்தின் அனைத்துப் பணிகளும் நன்றாக நடைபெற்று வருகின்றன. இது, ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்த படியாக, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமையும். இந்த திட்டத்தை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று பிரித்து பார்ப்பதற்கு பதிலாக இந்திய நாட்டின் முக்கியமான மையமாக பார்க்க வேண்டும்.
2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும். சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது போல, சந்திரயான்-4 திட்டமானது நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்து திரும்ப பூமிக்கு கொண்டு வரும் இலக்குடன் செயல்படும். இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]