சென்னை: தமிழகம் முழு​வதும்  அறநிலையத்துறையின் கீழ்  உள்ள 48 பெரிய கோயில்​களின்  முழு வரவு – செலவு தொடர்​பான தணிக்கை விவரங்​களை இரண்டு  வாரங்​களில் இணை​ய தளத்தில் பதிவேற்​றம் செய்​ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வர் டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 2023-ல் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக மனுதாரர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  அறநிலை​யத் துறை சட்​டப்​படி, அத்​துறை​யின் வரவு-செலவு தொடர்​பாக ஒவ்​வோர் ஆண்​டும் தகு​தி​யான தணிக்​கை​யாளர்​களைக் கொண்டு கண்​டிப்​பாக தணிக்கை செய்ய வேண்டும். ஆனால், அதிக அளவில் வரு​மானம் வரக்​கூடிய பெரிய கோயில்​களின் வரு​வாயை முறை​யாக தணிக்கை செய்​வது இலலை. மேலும் அதை பொதுவெளியில் பார்வைக்கும்  வைப்பது இல்லை.   இதனால்  கோவில்களுக்கு வரும் வருமானத்தில், எவ்​வளவு நிதி செலவு செய்​யப்​படு​கிறது, எவ்​வளவு  உபரிநிதி எவ்​வளவு இருப்பு உள்​ளது, என்பது பொதுமக்களுக்கு  தெரிவ​தில்​லை.

இதன் காரண​மாக கோயில் நிதி, அறநிலை​யத் துறை அதி​காரி​களுக்கு வாக​னம் வாங்​கு​வதற்​காக​வும், துறை சார்ந்த கூட்​டங்​களுக்கு டீ, காபி, தண்​ணீர் பாட்​டில், பிஸ்​கெட் வாங்​கு​வதற்​காக​வும் செல​விடப்​படு​கிறது.

எனவே, தமிழகம் முழு​வதும் அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து கோயில்​களின் வரவு-செலவு குறித்த ஆண்டு தணிக்கை விவரங்​களை அறநிலை​யத் துறை​யின் இணை​யதளத்​தில் அனை​வரும் தெரிந்து கொள்​ளும் வகை​யில் பிடிஎப் வடி​வில் பதிவேற்​றம் செய்​யு​மாறு அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமனற்  நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், எஸ்​.சவுந்​தர் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில்  விசாரிக்கப்பட்ட வந்தது. நேற்று  (டிசம்பர் 5ந்தேதி)  விசாரணையின்போது,   அறநிலை​யத் துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன், “ரூ.1 கோடிக்​கும் மேல் வரு​மானம் உள்ள 48 கோயில்​களின் வரவு செலவு தொடர்​பாக தணிக்கை செய்​யப்​பட்​டு, அதுகுறித்த சுருக்​க​மான விவரங்​கள் இணை​யத்​தி்ல் பதிவேற்​றம் செய்​யப்​பட்டு வி்ட்​டது, மேலும், பல கோயில்​களின் தணி்க்கை விவரங்​கள் தயா​ராக உள்​ளன” என்​றார்.

அதற்கு மனு​தா​ர​ரான டி.ஆர்​.ரமேஷ், “பெரிய கோயில்​களின் வரவு-செலவு தொடர்​பான முழு விவர அறிக்கை இன்​னும் இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட​வில்​லை என்று குற்றம் சாட்டினார். மேலும், கோவில்களுக்கு  ஆண்​டு​தோறும் கிடைத்த வரு​மானம், செல​வுக்​கான முழு விவரங்​கள் குறித்த தணிக்கை விவரங்​களை தாக்​கல் செய்​ய​வில்​லை” என்​பதையும்  ஆதாரங்களுடன் தெரிவித்தார்.

இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இணையதளத்தில் சுருக்கமான தணிக்கை அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “அறநிலை​யத் துறை சார்​பில் சுருக்​க​மான தணிக்கை விவரங்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டாலும், தமிழகம் முழு​வதும் உள்ள 48 பெரிய கோயில்​களின் தணிக்கை தொடர்​பான முழு விவரங்​களை​யும் இரு வாரங்​களில் இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை டிச. 18-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்துள்ளனர்.