சென்னை: திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், மதுரையில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை”, கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது என ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே காவல்துறையை குவித்து, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திய தமிழநாடு அரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாக திமுக அரசின் ஆவணம் இந்து மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மேலும், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு காத்திருக்கிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாவ அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் முதல் வீடு திருப்பரங்குன்றம் தான். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தான் இந்து மக்களின் பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி இருந்தும் தங்களது நம்பிக்கை, வழிபாட்டு முறையை செய்வதற்கும் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவல நிலை இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ளது வருத்தத்துக்குரிய ஒன்று.
இது தொடர்பான சட்டப்போராட்டத்தில் வென்ற பின்னரும், தங்களது எளிய சடங்குகளை கூட இந்து மக்களால் செய்ய முடியவில்லை என்றால் உண்மையிலேயே அவர்களுக்கு அரசியலயலைப்பு சட்டத்தின் படி நீதி கிடைத்துள்ளதா? இந்துக்கள் கசப்பான ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது.
முதலில் தனி நீதிபதி வாயிலாகவும், இதன் பின்னர் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வாயிலாகவும் இந்துக்களின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டரீதியாக நாம் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனாலும் நாம் விட்டுக்கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.
இதுபோல் வேறு எந்த மத நிகழ்ச்சியையாவது ஒரு வாரம் தள்ளி வைக்க முடியுமா? குறிப்பிட்ட நாளில் நடைபெற வேண்டிய புனிதமான ஒரு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்ற முடியுமா?
சனாதன தர்மத்தை பொறுத்தவரை கார்த்திகை தீபத்தின் புனித நொடி திருடப்பட்டுவிட்டது. நம்முடைய உரிமையை வென்றெடுத்தும் தீபம் ஏற்றுவதில் கோட்டை விட்டு விட்டோம்.
இந்து மத பாரம்பரியங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை சிலர் கேலி செய்கின்றனர். இது போன்று மற்ற மதத்தினரிடம் நடந்து கொள்வார்களா?
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 25 ஆவது சட்டப்பிரிவு வழங்கி இருக்கும் உரிமை மத சுதந்திரம். காவல்துறை ஆணையரும், மாவட்ட கலெக்டரும் நீதிமன்றத்தின் தீர்ப்பையே இல்லாமல் ஆக்கிவிட முடியுமா?
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து இந்து மக்களின் நலன்களுக்கும், கோயில் பாரம்பரியத்துக்கும் எதிராக எப்படி செயல்பட முடியும்? அவர்கள் தங்களது பொறுப்பு மற்றும் கடமையில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்?
இனியாவது ஒன்றுபடவில்லை என்றால் இந்து என்ற உணர்வையே நாம் இழந்து விடுவோம். சொந்த மண்ணில் தங்களுக்கு நேரும் அவமானங்களுக்கு எதிராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மற்றும் காமாக்யா முதல் துவாரகா வரை இந்துக்கள் வீறுகொண்டு எழும் நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பவன் கல்யாண் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.