சென்னை: ரயில் நிலைய கவுண்ட்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய  ஓ.டி.பி. கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி OTP சரிபார்ப்பு அவசியம்  என்று ரயில்வே அறிவித்து உள்ளது.   இந்த புதிய அமைப்பு முகவர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது. பயணிகள் படிவத்தில் வழங்கப்பட்ட அவர்களின் மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவார்கள். டிக்கெட் உறுதிப்படுத்தல் வெற்றிகரமான OTP சரிபார்ப்பைப் பொறுத்தது.

பொதுமக்கள் மத்தியில் ரயில் பயணத்துக்கு என தனி வரவேற்பு உள்ளது.  சாலைகளில் ஏற்படும் நெரிசல், நீண்டதூர பயணத்துக்கு ரெயில் பயணத்தையே மக்கள் விரும்புகின்றனர். இதில், பெரும்பாலான பயணிகள் ஐ.ஆர். சி.டி.சி. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து வரு கின்றனர்.  பலர்  ரயில் நிலையங்களில் செயல்படும் புக்கிங் கவுண்டர்கள் மூலமும் முன்பதிவு செய்து வருகின்றனர். அவசர தேவைக்கு  தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவும் செய்து வருகின்றனர்.

இதில், கடைசி நேரத்தில் எடுக்கப்படும் தட்கல் டிக்கெட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.  இந்த  குளறுபடிகளைத் தடுக்க 2025   கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது. இருந்தாலும், தட்கல் டிக்கெட் எடுப்பதில் முகவர்களின் ஆதிக்கமே இருந்துவருகிறது. இதையெடுத்து,  ரேயில்வே ஸ்டேயன்களுக்கு நேரடியாக சென்று டிக்கெட் கவுண்ட்டர் களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை ரெயில்வே வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த புதிய நடைமுறை சோதனை அடிப்படையில் கடந்த மாதம் 17-ந்தேதிசிலரெயில்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இது வரவேற்பை பெற்ற நிலையில் கூடுதலாக 52ரெயில்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையின்படி, தட்கல் டிக் கெட்முன்பதிவு செய்யும் பயணி தனது முன்பதிவு படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரப்பெறும். ஓ.டி.பி. சரிபார்க்கப்பட்ட பின்னரே அவருக்கு தட்கல் டிக் கெட் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட்முன்பதிவில் தவறான பயன்பாட்டைதவிர்க் கும் வகையில் இந்த நடைமுறை அமல்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.