சென்னை: திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி இந்து தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது திமுக அரசு என மத்திய அமைச்சர் அமைச்சர் எல் முருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆன்மீகத்திற்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சித்தபோது புதன்கிழமை ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்து அமைப்பினர் 13 பேரைக் கைது செய்துள்ளனர். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விஷயத்தில், உயர்நீதிமன்றம் 2வது முறையாக உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மாலை நேரத்தில் ஆட்சியை மிரட்டி 144 தடை போட்டு, ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகஅரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக, மதுரையில் பதற்றம் நிலவி வருகிறது.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டது. அதன்படி தீபத் திருநாளான நேற்று, தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காலை முதலே காத்திருந்தனர். எனினும் நேரம் ஆக ஆக கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகள் செய்யவில்லை. இது அங்கு கூடியிருந்த மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினர்.
இதற்கிடையில், நேற்று காலை முதலே திருப்பரங்குன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், மாலை நீதிமன்ற உத்தரவு மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. மேலும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் துணையுடன் 10 பேர் தீபம் ஏற்றலாம் என கூறியிருந்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த திமுக அரசு, மாவட்ட ஆட்சியர் மூலம் இரவு 144 தடை உத்தரவை பிறப்பித்து, மக்கள் கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் மாலை 6 மணிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாக அதிகாரிகள் அலுவலகத்தை பக்தர்கள் முற்றுகையிட்டனர்.
இதனிடையே நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், தீபம் ஏற்றப்படாததால், கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது இந்து மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅமைச்சர் எல்முருகன்.
இந்த நிலையில், 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவாரகள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுரதொடர்பாக விடுத்துள்ள பதிவில், திமுகவின் கொடூர ஆட்சி, மீண்டும் ஒரு முறை இந்துக்களின் முதுகில் குத்தியுள்ளது. பாசிச திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை மீறி காவல் துறையை ஏவி திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் இந்து சமுதாய மக்களை தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் நம்பிக்கையை மோசடி திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தகர்த்தெறிந்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் சட்டத்தை படுகொலை செய்துள்ளதாகவும், உயர் நீதிமன்றம் இரண்டாவது முறை உத்தரவு பிறப்பித்த பிறகும் கூட 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி, இந்துக்களின் நம்பிக்கை மீதும் சனாதன தர்மத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. நாசக்கார திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்து மக்களின் விருப்பம் என்றவர், அதை தமிழக அரசு பாசிச, இந்து விரோத அரசு தடுத்துருள்ளது. திமுக அரசு சிறுபான்மையினர் வாக்குகளை பெற தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் அவர் சாடினார்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது என்றும், இந்து விரோத திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும் என்றவர், “144 தடை உத்தரவு பிறப்பித்தது முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், “அதிகாரத்தில் உள்ளவர்கள் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக காவல்துறை சொல்கிறது என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
ஆன்மீகத்திற்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், இதற்கான அணியில் யார் இணைந்தாலும் வரவேற்பேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் பிரச்சாரத்திற்காக வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் லக்கூர் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த {கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்,
பின்னர் செய்தியாளர்கள் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இணைவரா என்ற கேள்விக்கு ஆன்மீகத்திற்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற யார் இணைந்தாலும் வரவேற்பேன் என தெரிவித்தார்.
அண்ணாமலை
இது குறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சனாதன தர்மத்தின் மீதான விரோதம் காரணமாகவே திமுக அரசு இதுபோன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத இந்தச் செயல் தமது மக்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குவதாகவும் கூறியுள்ளார்.
இந்துக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை இந்துக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான போலீசாரை வைத்து இந்து மதத்தின் புனித செயலை திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளதாகவும், சனாதன தர்மம் மீது திமுகவுக்கு இந்த அளவு வெறுப்பு ஏன் என்பதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
எச்.ராஜா
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை கிளையின் உத்தரவை அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை என்றும், நீதிமன்றத்தை மட்டுமின்றி முருகபெருமானை அவமதிக்கும் துறையாக மாறியுள்ளது என சாடினார்.
அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு உள்ளது சாபக்கேடு என்றும், மே மாதத்திற்கு பின் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார்
சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் பணி செய்வதை விடுத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டிய அவர், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.