சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ், 2026ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026-ம் ஆண்டில், அரசு பணிகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்பும் வகையில், குரூப் 1, 2, 4 உள்பட 6 தேர்வுகள் உள்ப மொத்தம் 6 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டணை 2026 வெளியாகியுள்ளது. வரும் ஆண்டில் குரூப் 1, 2, 4 உட்பட மொத்தம் 6 தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திட்டமிட்டுள்ளது
. 2026-ம் ஆண்டில் மே மாதம் முதல் தொடங்கி அக்டோபர் மாதம் வரை அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான டின்பிஎஸ்சி ஆண்டு அட்டவணை வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணை 2026
2026-ம் ஆண்டில் குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 ஆகிய குடிமைப் பணிகள் தேர்வுகளும், ஒங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகளில் – நேர்முகத் தேர்வு பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப்படிப்பு/ தொழிற்பயிற்சி நிலை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இத்தேர்விற்கான அறிவிப்பு மே 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொடங்கி, பாட வாரியாக 7 நாட்களுக்கு நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு 2026
துணை மாவட்ட ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும்.
ஒங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (டிப்ளமோ/ ஐடிஐ) 2026
டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித்தகுதியின் அடிப்படையில் நடத்தப்படும் இத்தேர்விற்கான அறிவிப்பு ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு செப்டம்பர் 20 முதல் தொடங்கி 7 நாட்களுக்கு நடைபெறும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு 2026
குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும். இதற்கான முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும்.
ஒங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகள்) 2026
இத்தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகி, தேர்வு நவம்பர் 14 முதல் தொடங்கும். இத்தேர்வை 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2026
அதிக தேர்வர்கள் எழுதும் தேர்வான குரூப் 4 தேர்வு, 2026-ம் ஆண்டு இறுதியான அறிவிப்பாக அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும். இதற்கு தேர்வு ஒரே கட்டமாக டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணை என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், எப்போது அறிவிப்பு வெளியாகும், தேர்வு எப்போது நடைபெறும் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தேர்வுகள் மூலம் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது அறிவிப்பு வெளியாகும்போது தெரியவரும். அறிவிக்கையில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறையாக 2024-ம் ஆண்டு முதல் ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டு வருகீறது. அதன்படி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அட்டவணை வெளியாகியுள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் முன்னரே தேர்வு எப்போது நடைபெறும், என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்பதை அறிந்துகொண்டு தயாராக உதவியாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் குறித்த தேதிகளில் அறிவிப்பு வெளியாகி, தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், வரும் ஆண்டிலும் தேர்வுகளை குறித்த நேரத்தில் நடத்தி, முடிவுகள் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.