சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவுக்கு வரும் நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக  வில்லன் நடிகர் மன்சூரலிகான் காமெடி பண்ணுகிறார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி (அட்ரஸ் இல்லாத கட்சி)  தலைவருமான மன்சூர் அலிகான் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

 தமிழ்நாடு, கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது.  நவம்பர் 4ந்தேதி தொடங்சிகய இந்த பணி டிசம்பர் 4ந்தேதி (நாளை) உடன் முடிவுக்கு வருகிறது. முதல்கட்டமாக அனைத்து வாக்காளர்களுக்கும் படிவங்களை வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ), தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதுவரை 94 சதவிகித படிவங்கள் நிரப்பப்பட்டு திரும்ப வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மீதமுள்ளவர்கள் படிவங்களை வழங்க டிசம்பர் 11ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கும் வகையில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்துக்கு மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை  இன்று (புதன்கிழமை)  காலை தொடங்கியுள்ள மன்சூர் அலிகான், எஸ்ஐஆர் பணிகளை நிறுத்தும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

வில்லன் நடிகரான மன்சூர் அலிகான்,  எஸ்ஐஆருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது காமெடியாக சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் பெருகி உள்ள நிலையில்,  அவரது மகனே போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நிலையில், அதற்காக குரல் கொடுக்க மன்சூர், போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரித்துள்ளது, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்! தோ்தல் ஆணையம் தகவல்…