சென்னை: டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மழை வேகமெடுக்க தொடங்கி உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப ஜான் தெரிவித்து உள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடல் பரப்பில் நிலை கொண்டிருக்கும் வரை இப்படி மழை பெய்து கொண்டே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வலுவிழந்த டிட்வா புயல், கடந்த 6 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை அருகே 35 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதால், சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களில் விடாது மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொதுவாக சாதாரணமாக உருவாகும் மேக கூட்டங்களை விட, சக்தி வாய்ந்த செங்குத்து வளர்ச்சி கொண்ட மேகங்கள் கடலில் உருவாகி வருகிறது. இவை இடி மின்னலுடன் கூடிய கனமழையை கொடுக்கும்.
” ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு அருகில் இருக்கும் வரை அது தொடர்ந்து கனமழையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சுற்றியுள்ள ஈரப்பதத்துடன் கூடிய காற்றை மிக வேகமாக ஈர்க்கும் இயல்பு கொண்டது. இப்படி ஈர்க்கப்பட்ட மேகங்கள், மையப்பகுதியை அடைந்தவுடன் உடனடியாக மேலே சென்று பெரிய மேக கூட்டங்களை உருவாக்குகிறது. இந்த செயல்முறைகள் எல்லாம் மிக வேகமாக நடப்பதால் முன் அறிகுறி இல்லாமல் திடீரென மழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடல் பரப்பில் நிலை கொண்டிருக்கும் வரை இப்படி மழை பெய்து கொண்டே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 13 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 19 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது
. பாரிஸ் கார்னர், மணலி புதுநகர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் 16 செ.மீ அளவுக்கும், பேசின் பாலம், ஐஸ் ஹவுஸ், விம்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 செ.மீ அளவுக்கும், வடபழனி, கத்திவாக்கம், காசிமேடு பகுதிகளில் 12 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!