சென்னை: ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர் சிவகுமார் மற்றும் 1846 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும் போது, பல்கலை. வேந்தராக மட்டுமல்ல கலைஞன் என்ற முறையில் இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பட்டங்களை வழங்கினார். மூத்த திரைக் கலைஞர், சிறந்த ஓவியர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார். 1846 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
அத்துடன், நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (28.11.2025) காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் மு.க.ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகர் சிவகுமாருக்கும், ஓவியர் குருசாமி சந்திரசேகரனுக்கு வாழ்நாள் சாதனைக்காக முனைவர் பட்டங்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக இணை வேந்தர் சாமிநாதன் , துணை வேந்தர் சீ.சௌமியா, ஆட்சிமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவில் 1.846 மாணவர்களுக்கு கவின் கலைகளில் பட்டங்களையும் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்தினார்.
அப்போது, இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றவர், இந்த பல்கலைக்கழகத்திற்கு ஜெ ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டிருப்பதால், தான் பாகுபாடும் காட்டவில்லை; புறக்கணிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கலைகள், கலைஞர்களை போற்ற வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமை என்றவர், இந்த பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக, பல்கலை. வேந்தராக மட்டுமல்ல கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன் என்றார்.
இசை, கவின் பல்கலை. நிர்வாகத்திறனை மேம்படுத்த ஊதியம், நிர்வாகச் செலவுத் தொகை ரூ.5 கோடியாக உயர்த்தப்படுவதாக அறிவித்தவர், கவின் கலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கும் விதமாக மதுரை வலையங்குளத்தில் பயிற்சி பள்ளி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.