சென்னை: சென்னையில் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள OMRல் (மழைய மகாபாலி புரம்) சாலையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையான ஈசிஆர் (ECR) சாலையை இரும்பு பாலம் கொண்டு இணைக்க இணைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த பாலத்திற்கான திட்ட மதிப்பிடு ரூ.204 கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, தொழில் நிறுவனங்கள், வாக்கப்போக்குவரத்து அதிகரிப்பு போன்றவை காரணமாக, சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் ஒருபக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மற்றொருபுறம் மக்கள் நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை திட்டங்களும் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4 வழி சாலைத்திட்டம், 6 வழிச்சாலை திட்டம், 8 வழிச்சாலை திட்டம் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல மணி நேரம் பயணிக்க வேண்டிய இடத்திற்கு சில மணி நேரங்களில் செல்ல முடிகிறது.
இந்த நிலையில், ஓஎம்ஆர் எனப்படும் ஓல்டு (பழைய) மகாபலிபுரம் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியில் இரும்பு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, 204 கோடி மதிப்பில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க அமைக்க முடிவு செய்து, அதற்கு அனுமதி கோரி கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு திட்டம் குறித்து அனுப்பப்பட்டது.
அதாவது, தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலைத் துறை, நீலாங்கரையில் உள்ள பகிங்காம் கால்வாயைக் கடந்து புதிய பாலம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரி உள்ளது. இதனையடுத்து தான் டலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, புதிய இரும்பு பாலமானது, பல்லாவரம் 200 அடி ரேடியல் ரோடு–OMR சந்திப்பிலிருந்து ஆரம்பமாகி, நீளங்கரையில் உள்ள ECR-ல் முடிவடையும்.
ECR மற்றும் OMR ஐ இணைக்கும் வகையில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் 0.8 கிலோமீட்டர் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய இணைப்புச்சாலை உருவாக்கத்தின் மூலம் ராஜிவ்காந்தி சாலை, ஓ எம் ஆர் மற்றும் இ சி ஆர் சாலைகளுக்கு நேரடியான இணைப்பு கிடைக்கும். 30.5 மீட்டர் பரப்பளவு ரைட் ஆப் வே (RoW) உடன் 1.465 கிலோமீட்டர் நீளத்தில் உருவாகும் இந்த இணைப்பு சாலை, சென்னை தென் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த இணைப்பு சாலை, ECR வழிப்பட்ட மக்களுக்கு நகரிற்குள் குறைந்த தூரத்தில் சென்று சேர உதவும். அதேசமயம் சோழிங்கநல்லூர், திருவான்மியூர் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இந்த திட்டம் முடிவடைந்தவடன் OMR–பல்லாவரம் தோராய்ப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பில் 40% போக்குவரத்து மாற்றம் ஏற்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகிங்காம் கால்வாயைக் கடக்கும் பாலம் 96 மீட்டர் நீளமாக அமைக்கப்பட உள்ளது. 32 மீட்டர் நீளமுள்ள மூன்று பீம்கள் கொண்டு உருவாக்கப்படும். அணுகுமுறைச் சாலைகளையும் சேர்த்து மொத்த நீளம் 376 மீட்டர், சாலை அகலம் 27.7 மீட்டராக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.