சென்னை; ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக  சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக மக்களை  ஏமாற்றிய புகாரில் ஆரூத்ரா நிதி நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2438 கோடி மோசடி செய்தது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 2022ம் ஆண்டு இந்த நிறுவனதுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். ஆனால், இந்த மோசடி வழக்க விசாரணை தாமதமாகிக்கொண்டே வந்தது. இதற்கிடையில் , ஆருத்ரா நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கை விசாரணை நடத்தி வந்த 3 டிஎஸ்பிக்கள் திடீரென அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாற்று நபர்கள் பணியமர்த்தப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது  தொடர்பாக  அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று  சென்னை, காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக வழக்கு செய்த நிலையில், வேளச்சேரியில் அருகே உள்ள மடிப்பாக்கத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மோகன்பாபுவின் வீடு உள்பட பல்வேறு பகுதிகளில்  அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த 3 டிஎஸ்பிக்கள் திடீர் விடுவிப்பு…!