சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில்து காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஒருசில நாட்களில் காற்றழுத்த தாழ்வுமண்டமாக மாறி, தீவிர புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்றுமுதல் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், 28ந்தேதி முதல் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலம் தெற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி புயலாக மாறி மேலும் தீவிரமடையலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தமான் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு 6 மணி நேரத்தில் மண்டலமாக வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் சென்யார் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
‘சென்யார்’ சூறாவளி வங்காளத்தின் கடலோரப் பகுதிகளில் வானிலை நிலைமைகளை பாதிக்கலாம், ஆனால் புயல் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கிச் செல்லுமா அல்லது வடக்கு நோக்கி ஒடிசா அல்லது வங்காளதேசத்தை நோக்கி வளைந்து செல்லுமா என்பது குறித்து அதிகாரிகள் உறுதியாகத் தெரியவில்லை.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 28,29,30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
நவம்பர் 25,26,27 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுக்கூடும் என்பதால் மீனவர்கள் கரைத் திரும்ப வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 28ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.