சென்னை:  தமிழ்நாட்டில் இதுவரை 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என கூறிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நாட்டிலேயே அதிக அளவில் பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில்,  இதுவரை வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன  என தெரிவித்துள்ள  தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள்  தொடர்பாக  இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியர் சீர்திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)   தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர்  4ந் தேதி தொடங்கிய இந்த பணி டிசம்பர் 4ந்தேதியுடன் முடிவடைகிறத. இதற்கான அரசு அலுவலகர்கள் வீடு வீடாக வழங்கிய பாரங்களை பெற்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் (SIR) பணிகளின் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்கள் (Booth Agents) நாளொன்றுக்கு 50 கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று, வாக்குச்சாவடி அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம் மிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனுமதி வழங்கியிருந்தார். மேலும் கடந்த ஒரு வாரமாக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,   தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்  பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக அர்ச்சனா பட்நாயக்  உடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ,நாளை முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள உள்னனர் என தெரிவித்தவதுடன்,  இதுவரை வழங்கப்பட்ட படிவங்களில் 50% படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றார்.

மேலும்,  தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்றும் கூறினார்

எந்த விசாரணையும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது  என்றவர்,  சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாபகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று கூறியதுடன்,   68,647 BLO-க்கள் உள்ளிட்ட 2.45 லட்சம் நபர்கள் SIR பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றவர், எஸ்ஐஆர் தொடர்பாக,   இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான BLO-க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்/

SIR பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டுள்ளன. SIR படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு டிச.4 அதனை நீட்டிக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.