சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மனோதங்கராஜ் தங்கை ரூ.100 கோடி சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை கடுமையாக சாடி உள்ளது.
இதுவரை, சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவிய அதிகாரிகள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

திமுக அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது குவிந்த புகார்கள் காரணமாக கடந்த 2024ம் ஆண்டு முதல்வர் ஸடாலின் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். அவர்மீது, ஆவின் பால் தட்டுப்பாடு, ஆவின் பாலில் கலப்படம் உள்ளிட்ட விவகாரங்களால்தான் இந்த நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதுபோல குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளையின் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
பின்னர், கட்சி நிர்வாகிகள் மற்றும் சிலரின் அழுத்தம் காரணமாக அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ், வருமானத்துக்கு அதிகமாக பல்வேறு முறைகேடுகள் மூலம் , போலி பத்திரங்கள் மூலம் சொத்துக்கள் வாங்கி குவிந்துள்ளது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பான புகாரில், மனோ தங்கராஜ், தனது தங்கையின் பெயரில், முறைகேடாக, அரசு நிலங்களை போலி பதிவு செய்து ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்யாத நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலி ஆவனங்கள் ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அரசுக்கும், காவல்துறைக்கும் கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரத்தில் காவல்துறை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கடுமையாக சாடியது. மேலும், இந்த போலி நிலம் பதிவு விவகாரத்தில், தாசில்தால், வருவாய் ஆய்வாளர்மீதும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நில மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.