சென்னை:  தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரித்து இருப்பதாக,  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான தகவலின்படி,  கடந்த நிதியாண்டில்   4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதாகவும்,   2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 635 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 184 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 11.92 சதவீத பங்களிப்பை வழங்கியிருக்கிறது என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக,  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிலேயே 31 ஆயிரத்து 517 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடத்தக்கது. அதன் படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் வாகன உற்பத்தி ஆலைகளும், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஜவுளி ஆலைகளும் அதிகளவில் உள்ளன.

இதனால் முந்தைய ஆண்டின் இதே காலத்தில், ரூ.1.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்றுமதி மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்ததில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம் 32 ஆயிரத்து 422 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும். திருப்பூர் 21 ஆயிரத்து 328 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. அவற்றில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை உள்நாட்டு சந்தையில் விற்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.