சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு  வலியுறுத்தி வரும்  டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர்  அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அரசு பணிகளில் வன்னியருக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும்  பாமக, வரும் டிச. 17-ந்தேதி  அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட‘ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து  பாமக தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த அதிமுக ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் பெற்ற வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக சாா்பில் வழக்குத் தொடா்ந்து தமிழகத்தில் வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. அத்துடன் உரிய தரவுகளைத் திரட்டி உரிய உள் இடஒதுக்கீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

எனினும், திமுக ஆட்சியாளா்கள் உள்ஒதுக்கீடு வழங்கவில்லை. தீா்ப்பு வெளியான நிலையில், முதல்வா் இடஒதுக்கீட்டை வழங்குவாா் என பாமக நிறுவனா் நம்பினாா். முதல்வருக்கு பலமுறை அவா் கடிதம் எழுதினாா். நேரிலும் சந்தித்து வலியுறுத்தினாா். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என திமுக அரசு கூறிவிட்டது.

ஆகவே, இடஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து வரும் டிச. 17 ஆம் தேதி பாமக சாா்பில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு கூறி உள்ளார்.