சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (நவம்பர் 18) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி எஸ்.ஐ.ஆர். பணிகள் புறக்கணிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்ஐஆர் திருத்தப்பணிககள் உரிய திட்டமிடல் என்றும் பயிற்சிகள் அளிக்காமலும் கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி வழங்காமல் அவசர கதியில் மேற்கொள்வதற்கு நிர்பந்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
இது அணைத்து நிலை வருவாய் ஊழியர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் பண விளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் கலைந்திட வலியுறுத்தி நாளை முதல் எஸ்ஐஆர் புறக்கணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த சங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய திட்டமிடல், பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள், நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் (SIR) பணிகளைச் செய்ய நிர்பந்திப்பதால், அதிகாரிகளுக்குக் கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலையவர் அலுவலக உதவியாளர் முதல் வட்டாச்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றும் தமிழ்நாடு வருவாய் துறை சங்ககளின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.